தர்மபுரி: தன்னார்வ அறக்கட்டளை சார்பில் மர கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 உலகம் முழுவதும் சிறப்பானதோர் நிகழ்வாக பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பலரும் பல அமைப்புகளும் இணைந்து பூமியை பாதுகாக்க மரக்கன்றுகளை ஏரிகள், குளங்கள், சாலையோரங்கள், அரசுக்கு சொந்தமான இடங்களில் வைத்து பராமரிக்கின்றனர். 

இன்று தருமபுரி நகராட்சி மற்றும் மை தருமபுரி அறக்கட்டளை இணைந்து அழகாபுரி மற்றும் எஸ் வி சாலையில் 234 மரக்கன்றுகளை நடவு செய்தனர். இந்த நிகழ்விற்கு தருமபுரி டான் சிக்சாலையா பள்ளி மாணவர்கள், கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மனமகிழ்வுடன் மரக்கன்றுகளை வைத்தனர். இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக தருமபுரி நகர் மன்ற தலைவர் லட்சுமி நாட்டார் மாது, துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகர நல அலுவலர் இலட்சியவர்னா, நகராட்சி ஆய்வாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

சிறப்பு அழைப்பாளர்களாக டான் சிக்சாலையா பள்ளி தாளாளர் சவிதா உதயகுமார், கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் அவர்கள் கலந்து கொண்டனர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஆகியோர் மரக்கன்று வைக்கும் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

தொடர்புடைய செய்தி