மேலும் இந்த கிராமத்திற்கு ஒரேநக்கல் குடிநீருக்காக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டும் போதிய குழாய் வசதி செய்து தரப்படாததால் குடிநீர் கிடைக்கவில்லை. தார்சாலை வசதியும், ஒரேநக்கல் குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறும்போது, பூஞ்சோலை கிராமத்தில் 137 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னபெரமனூர் கிராமத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். மண்சாலை. மழைக்காலத்தில் சேறு இருப்பதால் சாலையை பயன்படுத்த முடியவில்லை. எனவே எங்களது கோரிக்கைகளான ஒரேநக்கல் குடிநீர் மற்றும் தார்சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.