தர்மபுரி: பாமக சார்பில் காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை

தருமபுரி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலில் நேற்று புதன்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் 12 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டதுடன், 108 தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாநில பொறுப்பாளர் முனிவேல், ஒன்றிய செயலாளர் அன்பு கார்த்திக், ஒன்றிய தலைவர் வெங்கடேசன் மற்றும் பாமக முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி