இந்த நிலையில் நேற்று (மே 10) சோமேஸ்வர பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு கோவில் வளாகம் விழாக்கோலமாக காட்சியளித்தது. மேலும் காலை முதலே பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கல்யாண உற்சவம், பக்தர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாகும். தொடர்ந்து, சிறுவர்கள் நிகழ்த்திய நடனங்களை ஏராளமான பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்தனர்.