தர்மபுரி: அங்காடியில் ரூ.8.92 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் தமிழக பட்டு வளர்ச்சிதுறையின் சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடு ஏலஅங்காடியில் தினசரி பட்டுக்கூடு ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த நாளில் இந்த ஏலத்திற்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வெண்பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். 

இந்த நிலையில் நேற்று (ஜூன் 14) நடைபெற்ற ஏலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் 1761 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். மேலும் நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக 646 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக ஒரு கிலோ பட்டுக்கூடுகள் 358 ரூபாய்க்கும், சராசரியாக ஒரு கிலோ பட்டுக்கூடுகள் 502 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் சுமார் 8,96,072 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை நடைபெற்றதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி