தர்மபுரி: ஒகேனக்கலில் நீர்வரத்து கடும் சரிவு பயணிகள் ஏமாற்றம்

கூத்தப்பாடி ஊராட்சி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, நேற்று 300 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (பிப். 14) சனிக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 200 கன அடியாக சரிந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவி பாறை திட்டுக்களாக காட்சியளிக்கிறது. விடுமுறை தினத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்த நிலையில், நீர்வரத்து குறைந்ததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி