தருமபுரி மாவட்டம் இண்டூர் சோம்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி ஊராட்சி செயலாளர் வீட்டில் நள்ளிரவில் பூட்டை உடைத்து நகை பணம் திருடிய முகமூடி கொள்ளையர்கள் 2 பேரை காவல்துறையினர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். திருட பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருடி சென்ற 1,32,500 ரூபாய் பணம், 50 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. குற்றவாளிகள் இருவரும் பென்னகரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.