தர்மபுரி: சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி மெயின் ரோடு கடந்த ஒரு மாத காலமாக குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். பேருந்துகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சாலையை உடனடியாக சீரமைக்க அப்பகுதி மக்களும் தன்னார்வலர்களும் இன்று சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி