தர்மபுரி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கடந்த 5ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் செல்லும் பேருந்துகளும், தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளே இயங்கும் பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிசுபாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று சனிக்கிழமை மாலை பொதுமக்களுடன் இணைந்து நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.