தர்மபுரி: முள்ளங்கி விலை விவசாயிகள் கவலை

தர்மபுரி மாவட்டத்தில் முள்ளங்கி சாகுபடி அதிகரிப்பால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ முள்ளங்கி விவசாயிகளிடமிருந்து 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, சந்தைகளில் 10-12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் அடிப்படை ஆதார விலையை கூட பெற முடியாமல், பலரும் முள்ளங்கிகளை கால்நடைகளுக்கு உணவாக அளிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது கவலை அளிக்கும் நிகழ்வாக உள்ளது. அரசு தலையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி