தர்மபுரி: சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்குச் சேர்ந்த நல்லம்பள்ளியிலிருந்து லளிகம் செல்லும் சாலையிலிருந்து பூதனஅள்ளி கிராமத்திற்குச் செல்லும் பிரதான சாலை சுமார் ஐந்து ஆண்டுகளாகச் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிச் சேரும் சகுனிங்கமாக காணப்படுகிறது. இந்தச் சாலையை கோபாலம்பட்டி, பூதனஅள்ளி, கொட்டாய்மேடு மற்றும் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும் இங்கு தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தினசரி 100க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்துவதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும்போது அவ்வப்போது நிலைத்தடுமாறி வீழ்ந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்தச் சாலையைச் சீரமைக்குமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி