தர்மபுரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்

தர்மபுரி நகர பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே, புதன்கிழமை இடதுசாரிகள் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏழை நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சிபிஐ, சிபிஎம், உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி