பென்னாகரம் அருகே புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த தேன்மொழி, தனது 6 மற்றும் 4 வயது மகன்களுடன் நேற்று முன்தினம் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அவரது கணவர் முனியப்பன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பெரும்பாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இரண்டு ஆண் குழந்தைகளுடன் பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.