தர்மபுரி: பட்டாசு குடோனில் தீ விபத்து ஒருவர் படுகாயம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஆலமரத்தப்பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை, பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீப்பிடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாசிலாமணி என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி