தர்மபுரி: கார் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே அண்ணா நகரைச் சேர்ந்த இளங்கோவன் (46) என்பவர் வியாழக்கிழமை மாலை உறவினர் வீட்டிற்கு டூவிலரில் சென்று கொண்டிருந்தார். மடம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் அவர் படுகாயமடைந்து பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி