தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சக்கிலிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமியின் மகன் தெய்வகுமார், பாலக்கோடு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தேர்வில் 215 மதிப்பெண்கள் பெற்றதால் மனமுடைந்த அவர் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் கவிதா பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை புகார் அளித்தார். இதன் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.