தர்மபுரி: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகளை தொடக்கி வைக்கும் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், 1828 பயனாளிகளுக்கு 14.73 கோடி மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் உட்பட, ஒட்டுமொத்தமாக பல்வேறு துறைகளின் சார்பில் 5,943 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தர்மபுரி ஆட்சியர் சதீஷ், தர்மபுரி எம்பி மணி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி