தர்மபுரி: கிரானைட் கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல்

பாப்பாரப்பட்டியில் எஸ்.ஐ. ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆவணங்கள் இன்றி 30 டன் கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். ஏரியூர் அருகே வத்தலாபுரம் பகுதியிலிருந்து கற்களை கடத்தி வந்ததாகக் கூறப்படும் லாரி ஓட்டுநர் இளையராஜாவை கைது செய்த போலீசார், உரிமையாளர் வெங்கடாசலத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி