மேலும் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தது. பின்னர் சாமிக்கு பாராயணம் மற்றும் உபகார பூஜை மற்றும் சேவை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. அப்போது சாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் சாமியை வழிபட்டனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க சாமி உற்சவம் நடந்தது.
ஆண்டுக்கு ஒருமுறை சப்தமி நாளில் பெருமாள் கோவிலில் இருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.