கூத்தப்பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அளேபுரம், அக்ரஹாரம், குள்ளாத்திரம் பட்டி, கூத்தப்பாடி மடம், பொச்சாரம் பட்டி, மல்லாபுரம், ஜங்கமையூர், ராஜாவூர் உட்பட 18 கிராமங்கள் மற்றும் கர்நாடக மைசூர் மகாராஜா வம்சத்தவர்கள் சேர்ந்து இந்த தேரோட்டத்தை நடத்தினர்.
இந்த தேரோட்ட நிகழ்ச்சிக்கு ஏழு ஊர் நாட்டு கவுண்டர் முன்னாள் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ந. நஞ்சப்பன் வடம் பிடித்து தேரை தொடங்கி வைத்தார். இந்து அறநிலையத்துறை செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். தேரோட்ட நிகழ்ச்சிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். சிறியவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தேரோட்டத்தை கண்டு களித்தனர்.