தர்மபுரி: வரத்து அதிகரிப்பு சின்ன வெங்காயம் விலை சரிவு

தர்மபுரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் தொழில் இருந்து வருகிறது. இங்கு தக்காளி, கத்தரிக்காய், வெண்டை, முள்ளங்கி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் சமீப நாட்களாக பொழியும் கனமழையின் காரணமாக சின்ன வெங்காயம் வரத்து குறைந்தது.

 இதனால் நேற்று முன்தினம் வரை உழவர் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 65 ரூபாய்க்கும், வெளிமார்க்கெட்டுகளில் 75 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஜூன் 14 சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ 55 ரூபாய்க்கு சின்ன வெங்காயம் உழவர் சந்தையில் விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி