தர்மபுரி: பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தமிழகத்தில் இன்று அரசு தேர்வாணையத்தில் நடத்தப்படும் குரூப் ஒன் தேர்வுகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்திலும் அரசு பள்ளிகள் & கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் & கல்லூரிகளில் நடைபெற்றன. இதில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தேர்வர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பிற்பகல் தேர்வு முடிந்த நிலையில் தர்மபுரி நகராட்சி புறநகர் பேருந்து நிலையத்தில் ஏராளமான தேர்வர்கள் ஒரே நேரத்தில் பேருந்து நிலையத்திற்குள் வந்ததால் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில் இன்று அரசு தேர்வு எழுதியவரும் தேர்வர்களும் வந்திருந்ததால் மக்கள் கூட்டத்தால் பேருந்து நிலையம் கலைகட்டியது. தொடர்ந்து பாதுகாப்பு பணிகளுக்காக காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி