தர்மபுரி: மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கன மழை

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று சனிக்கிழமை காலை வெப்பம் நிலவிய நிலையில், மாலை பாலக்கோடு, கடமடை, நாகதாசம்பட்டி, பாப்பாரப்பட்டி, பி. அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நல்லம்பள்ளி, தொப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் பகுதிகளிலும் மிதமான மழை பதிவாகியுள்ளது. பாதுகாப்பு கருதி பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி