தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அம்மன் பூதவாகனத்தில் மேள தாளங்கள் முழங்க மயானம் நோக்கி புறப்பட்டார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து மயானத்தில் அம்மனுக்கு வழிபாடு செய்தனர்.