தற்போது அந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது. அவ்வப்போது அங்கு சென்று சுத்தம் செய்வர். இதே போல், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று பார்த்தபோது, அங்கிருந்த 3 மோட்டார் மற்றும் கம்பிரசர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது தெரிந்தது. இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை காவலர்கள் விசாரணை நடத்தினர். அதில், வெங்கட்டம்பட்டி தேங்காமரத்துப்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் தர்மா (வயது 19) மற்றும் 3 சிறுவர்கள் மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தர்மாவை நேற்று காவலர்கள் கைது செய்தனர். அதே போல், 3 சிறுவர்களையும் பிடித்து சேலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.