தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று புதன்கிழமை தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசின் கூட்டுறவு விவசாயிகள் கடன் தள்ளுபடி அறிவிப்பில் உள்ள குளறுபடிகளை நீக்கி விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, கையில் திருவோடு ஏந்தி நெற்றியில் நாமமிட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.சி.எஸ். சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.