இந்த நிலையில் நேற்று (மே 8) நண்பகல் பாலக்கோடு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில் வெகு நேரம் ஆகியும் வராததை அடுத்து அவரது மனைவி கணவன் தர்மனை தேடி சென்ற போது தொட்டலாம்பட்டி பகுதியில் உள்ள சாலையோரம் தர்மன் மயங்கி கிடந்துள்ளார்.
இது குறித்து உடனடியாக கோவிந்தம்மாள் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் காவலர்கள் தர்மனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெயிலின் தாக்கத்தால் தர்மன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.