தர்மபுரி: தொடர் போராட்டத்திற்கு பின் கிடைத்த குடிநீர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட உடையான்கொட்டாய் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தினமும் நீர் தேடி காவேரி ஆற்றில் 1 கிலோமீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலையில் உள்ளனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கோரிக்கை மனுக்கள் அளித்தும் பயனில்லை. மேலும் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. மோட்டார் அமைத்தும் குடிநீர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வலியுறுத்தினர். 

இது குறித்து வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலானது. இதனை அடுத்து இந்த பிரச்சனையை பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து, இன்று (மே 09) பகுதி மக்களுக்கு மோட்டார் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டது. கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி