தர்மபுரி நகரப் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டம் பிடமனேரி நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் நாய்கள் பொதுமக்களை விரட்டுவதால் அச்சம் நிலவுகிறது. இதனால், இந்தப் பகுதிகளில் உள்ள நாய்களைப் பிடிக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி