தர்மபுரி: வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், போடூர் ஊராட்சியில் அம்ருத் 2. 0 திட்டத்தின் கீழ், ரூ. 19. 46 கோடி மதிப்பில் குடிநீர் குழாய் பதிப்பு பணி மற்றும் டேங்க் அமைக்கும் பணிகளை நேற்று மாலை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து, பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் KNMT - கலைஞர் நகர்புறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2. 32 கோடி மதிப்பீட்டில் வார சந்தையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், இ. ஆ. ப. , நேரில் பார்வையிட்டு, கள ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மாங்கரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சதிஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிப்பணிகள், திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளின் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி