தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டனர். நேற்று நடைபெற்ற சந்தையில், தேங்காயின் அளவுக்கேற்ப ஒரு தேங்காய் 13 ரூபாய் முதல் 21 ரூபாய் வரை விற்பனையானது. வியாபாரிகளின் தகவல்படி, ஒட்டுமொத்தமாக 14 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.