தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி ஒவ்வொரு வாரமும் வியாழன் தோறும் கால்நடைகள் விற்பனைக்காக வார சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். ஆடுகள் 7000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையிலும் மாடுகள் 9,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரையிலும் என நேற்று ஒரே நாளில் 52 லட்சத்திற்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாகவும் ஆடி 18 முன்னிட்டு விற்பனை விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.