தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த பஸ்வபுரம் பகுதியில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில், கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு பராமரிப்புகளை சிறப்பாக செய்த விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கால்நடை மருத்துவர்கள், பராமரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.