தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே நேற்று வெள்ளிக்கிழமை மாலை, நல்லம்பள்ளி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் என்பி. பெரியண்ணன் காரில் சென்றபோது, எதிரே வந்த தனியார் பேருந்து கார் மீது உரசி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.