தர்மபுரி: போக்சோ வழக்கில் கட்டிட மேஸ்திரி கைது

தர்மபுரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி அருண்குமார் (30) என்பவருடன் பழகி கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து வீட்டில் தெரியவரவே மே-25ல் தனது தாய், பாட்டியுடன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயக்கத்தில் இருந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பென்னாகரம் மகளிர் காவலர்கள் அருண்குமாரை செவ்வாய்க்கிழமை மாலை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி