தர்மபுரி: கோயில் உண்டியலை உடைத்து திருடிய சிறுவன் கைது

இண்டூர் அருகே பள்ளப்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில், இரவு பூஜைக்குப் பிறகு பூட்டப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, உண்டியலை உடைத்து பணம் திருடிய 18 வயது சிறுவனைப் பிடித்தனர். அவனிடம் இருந்து ரூ. 480 மீட்கப்பட்டது. இண்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்தவன் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕