செட்டிக்கரையில் இன்று சனிக்கிழமை மாலை, தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணத்திற்கு என்ற நிகழ்ச்சியில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதில், விவசாயிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வீணாகச் செல்லும் காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும், தர்மபுரி மாவட்டத்திற்கு சிப்காட் பணிகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட தலைவர் சரவணன், நகர் செயலாளர் சாய் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.