தர்மபுரி: உலக சைக்கிள் தினத்தை ஒட்டி சைக்கிள் பேரணி

தர்மபுரியில் உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, இயற்கையைப் பாதுகாத்தல், உடல் ஆரோக்கியம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தன்னார்வலர்கள் மற்றும் சிறுவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நேற்று புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தருமபுரி நான்கு ரோடு சந்திப்பு வரை நடைபெற்ற இந்த பேரணியில், 'மை தர்மபுரி' தன்னார்வ அமைப்பினர் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி