இந்த நிலையில் ஜூன் 7 இன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகர பேருந்து நிலையத்தில் அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல் தலைமையிலும் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் முன்னிலையில் தின்னை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி திமுக அரசு அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்திவிட்டதாக கூறினார்.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் அனைத்து தொகுதிகளிலும் குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தின் ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக கொண்டு வந்து அதிமுகவின் அனைத்து நலத்திட்டங்களையும் மீண்டும் கொண்டுவர நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் பாடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
பின்பு முன்னாள் அமைச்சர் பாலக்கோடு நகரப் பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் அதிமுக மக்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.