தர்மபுரி: ஒகேனக்கலில் ஒற்றை யானை உலா.. மக்கள் அச்சம்

ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தை ஒட்டிய வனப்பகுதிக்கு கர்நாடகாவில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளன. கோடை காலத்தில் இங்கு தங்கிவிட்டு வசந்த காலத்தில் கர்நாடகம் திரும்புவது வழக்கம். இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஒகேனக்கல் செல்லும் பிரதான சாலையின் சிறுபாலம் அருகே ஒற்றை யானை திடீரென உலா வந்தது. இதனால் அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தினர். சிறிது நேரம் நிலவிய பரபரப்புக்குப் பின் யானை வனப்பகுதிக்குள் சென்றது.

தொடர்புடைய செய்தி