மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக 6500 கன அடியாக நீர்வரத்து காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டனர். மேலும் பலர் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் சினி ஃபால்ஸ் அவர்களின் குடும்பத்துடன் குளித்தனர். மேலும் மின் அருங்காட்சியகம், முதலைப் பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தொங்கும் பாலம் மற்றும் பார்வை கோபுரத்தில் ஏறி அருவியின் அழகை ஏராளமானோர் குடும்பத்தினர் நண்பர்களுடன் கண்டுகளித்தனர். தொடர்ந்து பாதுகாப்பு கருதி காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.