தர்மபுரி: ஒகேனக்கல் ஆற்றில் கனஅடியாக 6500 நீர் வரத்து சரிவு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப் பகுதிகளில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்தும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின் அளவைப் பொறுத்தும் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக காணப்படுகிறது. 

மேலும் கடந்த வாரம் முதல் கபினி அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் அவ்வப்போது நீரின் அளவு உயர்ந்து வருகிறது. மாலை 8 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து ஜூன் 14 இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 6500 கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி