தர்மபுரி: 4 இருசக்கர வாகனங்கள் மாயம்; மக்களே உஷார்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு, வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் பாப்பாரப்பட்டி சத்திரம் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், மாலை இண்டூரில் உள்ள மர இழைப்பகம் முன் இருசக்கர வாகனம் நிறுத்தியிருந்த நிலையில் அவரது வாகனம் திருடுபோனது. இதுபற்றி புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சமீப நாட்களில் பென்னாகரம் சரகத்தில் நான்கு இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி