தர்மபுரி: ஒகேனக்கல்லில் 4 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் அமைந்துள்ள ஓகேனக்கல் காவிரி ஆறு. இங்கே தினசரி ஓகேனக்கல் காவிரி ஆற்றின் அழகைக் கண்டு ரசிக்கவும், பரிசல் சவாரி மேற்கொள்ளவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியிலிருந்து ஜூன் முதல் வரை கோடை விடுமுறை பள்ளிகளுக்கு விடப்பட்டிருந்த நிலையில் ஓகேனக்கல் பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினசரி வந்து சென்றனர். இந்த நிலையில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதுகுறித்து தெரிவிக்கும்போது, இந்த கோடை விடுமுறைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளதாக தெரிவித்தனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கூடுதலாக பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி