தர்மபுரி: ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் செங்கல்பட்டு பகுதி சேர்ந்த முத்தப்பா மற்றும் அவரது உறவினர் பெங்களூரு மாநிலத்தைச் சேர்ந்த செம்பா ஆகியோர் குடும்பத்துடன் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குடும்பத்துடன் கொண்டாடி வந்திருந்தனர். ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, இரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகள் பாக்கியா லட்சுமி மற்றும் காவியா இருவரும் ஆழமான பகுதிக்குள் நீந்திச் சென்றனர். அப்போது நீச்சல் தெரியாததால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கியுள்ளனர். உறவினர்கள் தொடர்ந்து காப்பாற்ற முயற்சி செய்த போதிலும் சிறுமிகள் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக ஒகேனக்கல் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து பின்னர் ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சிறுமிகளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி