தர்மபுரி: பூஞ்சோலை கிராமத்தில் 1300 மரக்கன்றுகள் நடும் விழா

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் சார்பில் பளிஞ்சரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பூஞ்சோலை கிராமத்தில் 1300 மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சப்கலெக்டர் நர்மதா தலைமை வகித்து மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மகாகனி, சரக்கொன்றை, வேம்பு, அரசு, பூவரசு, புங்கன், நாவல், கொய்யா உள்ளிட்ட 52 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. 

நிகழ்ச்சியில் பென்னாகரம் தாசில்தார் பிரசன்னமூர்த்தி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், மணிவண்ணன், வட்டாரக் கல்வி அலுவலர்கள், பிக்கம்பட்டி பள்ளி தலைமையாசிரியர் சரவணன் மற்றும் தன்னார்வலர்கள் ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை இயற்கையை காப்போம் ஆசிரியர் தாமோதரன் மற்றும் தன்னார்வலர் குழுவினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி