தர்மபுரி: சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

பென்னாகரம் அடுத்த ஏரியூர் காவல் நிலையம் எல்லைக்குள் உள்ள தின்னபெல்லூர் காமாட்சி அம்மன் கோவில் எதிரில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் விளையாடுவதாக ஏரியூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று மாலை 4.30 மணிக்கு காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 13 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். 

அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணமும் 5 சீட்டு கட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை செய்ததில் நெருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆடல், பூச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பாலு, தின்னபெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஜலபதி, பெரும்பாலை, கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன், மூலபெல்லூர் பாரத், சாம்பள்ளிக்காடு குழந்தைகவுண்டர், சாம்பள்ளிக்காடு கோவிந்தன், நெருப்பூர் காமராஜ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், நெருப்பூர் கொண்டையானூர் சண்முகம், பென்னாகரம் மூங்கில்மடுவு முருகன், தின்னபெல்லூர் கோவிந்தன், மூங்கில்மடுவு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், பெரும்பாலை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் என தெரிய வந்தது. இவர்களை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி