இதே போல் அனுமதி இன்றி மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அப்போது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 15 பேரை போலீசார் கைது செய்தனர்.