பாப்பிரெட்டிப்பட்டி அருகே சூதாடிய 6 நபர்கள் கைது

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் பட்டுகோணாம்பட்டி பகுதியில் நேற்று (செப்டம்பர் 29) மாலை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது முனியப்பன் கோயில் அருகே பணம் வைத்து, சீட்டு விளையாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு நேரில் சென்று பார்த்த போது அதே பகுதியை சேர்ந்த முத்துமணி, திருமால், விஜய குமார், அமர்நாத், அசோகன், பாஸ்கர், உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து, சீட்டு கட்டுகள் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் 600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி