லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் டி. புதூர் கிராமத்தை சேர்ந்த சித்தன் மகன் சிங்காரவேலு. இவர் தர்மபுரியில் சொட்டு நீர் பாசன தனியார் டீலரிடம் ஊழியராக பணியாற்றி வந்தார். சிங்காரவேலு தர்மபுரியில் இருந்து இன்று (அக்.,2) மோட்டார் சைக்கிள் மூலம் தொப்பூர் நோக்கி வந்தார். தொப்பூர் கணவாய் பகுதியில் வந்த போது சிங்கார வேலு மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக பருப்பு லோடு ஏற்றி வந்த லாரி மோதியது.

இதில் சிங்காரவேலு லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். விபத்து பற்றிய தகவல் அறிந்தவுடன் அந்த பகுதி மக்கள் லாரி முன்பு திரண்டனர். காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி